சனி, 8 செப்டம்பர், 2012

கண்டுக்கொள்ளப்படாத :விளம்பர ஊடகங்கள்:


விளம்பர ஊடகங்கள்:
“ஊடகம்” இது அறிவியலின் படி ஆற்றல் மற்றத்திற்க்கான அத்தியாவசிய பொருள். ஒலி,ஒழி இடமற்ற்த்திற்க்கான மூலம்.இதே போல் கருத்துபரிமாற்றதில் ஊடகங்கள் உயிரகிப்போயிருக்க இந்த உயிர்க்கு உணவாகியிருப்பது விளம்பரங்கள்.

இந்த விளம்பர ஊடகங்கள் பெரும்பாளும் கண்டுகொள்ளப்படாத,அதிகம் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படாத ஒன்ரு, அதற்கான காரணம் செய்தித்தாள்,வானொளி,தொலைக்கட்சி என எல்லா ஊடகங்களுக்கும் இது வியாபார ரீதியில் வருவாய்க்கான வாசற்படிகளாக உள்ளது ஆதலால் இவற்றை கட்டுபடுத்தவோ,விமர்சிக்கவோ அரசியல்,சமூகம் பற்றி பேசித்திரியும் ஊடகங்கள் கூட தயாராக இல்லை என்பதே உண்மை.

இந்திய விளம்பர நெறிமுறை சட்டம் விளம்பரஊடங்களுக்கான நெறிமுறைகளை வகுத்துள்ளது.இவற்றில் பெரும் பகுதி சட்டங்கள் வணிகரீதியிலான போட்டிகளை அடிப்படையாக கொண்டவை அதாவது பெரும் நிறுவணங்களுக்கு இடையிலான காப்புரிமை,நேர்முக,மறைமுக சாடுதல்கள் தொடர்பானவை,மற்றவை மக்கள் நலன் குறித்தவை அதாவது மதம்,சாதி,அரசியல் சார்ந்த உனர்வுத்தூன்டுதல்,மது,போதைபொருட்க்கள்,விளம்பர ஊடகங்கத்தின் மீதான அரசின் இறயாண்மை தொடர்பானவை.

விளம்பர ஊடகம் தொடர்பாக நிருவனங்களுக்கு எதிராக உள்ள சட்டபிரிவுகள் சில பார்ப்போம், இது இனி வரப்போகும் கருத்துகளுக்கான பார்வைக்கண்ணாடியாக இருக்கும்.

குற்றவியல் நடைமுறை சட்டம் 1968.
இந்திய ஒப்பந்த சட்டம் 1872.
மருந்துக்கள் மற்றும் ஒப்பனை சட்டம் 1940.
ஆட்சேபிக்கதக்க விளம்பர சட்டம் (பொய்யான மாயை)1954
இளம் நபர்கள் கேடு விளைவிக்கும் விளம்பர சட்டம் 1956
பாதுகாப்புரிமை சட்டம் 1957
MRTP சட்டம் 1984
இனி இந்த விளம்பர ஊடகம் மற்ற ஊடகங்கள் வாயிலாக நிகழ்த்தும் சில அரங்கேற்றங்களை பார்ப்போம்.

        இந்தியாவில் கல்வியியலின் வளர்ச்சி குறித்து பேசவே தேவை இல்லை,இது படித்துக்கொண்டிருக்கிற,படித்துமுடித்த அனைவருக்கும் தெரிந்ததே.விளம்பர ஊடகங்கள் இதில் செய்வதை யோசித்தால் APJ-வின் கனவுகள் சற்று மங்களாகிப்போகும்.இப்போதய கல்லூரிகளின் விளம்பர ஊடக மந்திரம் “100% PLACEMENT”இது எந்த கல்லூரியாலும் நிரைவேற்ற முட்டியாத மாயை. மேலும் குறிப்பாக நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு முக்கியமான பொறியியல் துறையினரை உருவாக்கும் பொறியியல் கல்லூரிகளின் விளம்பர ஊடக கையாளுகை இன்னும் சற்றுகேவளம் இவைகளின் விளம்பர வாசகம் பெரும்பலும் ”வேலை வாங்கி தருகிறோம்” என்பதாகவே இருக்குமே தவிர ”அறிவை,அறிவியலை வாழ்க்கையய் கற்று தருகிறோம்” என்று இருப்பதில்லை.பிறகு இங்கு எப்படி கண்டுபிடிப்புகள் நிகழும்,எப்பொழுதும் போல பழமைபாராட்ட வேண்டியதுதான்.

     இது போன்ற கல்வியியல் சூழலில் ஒருவன் கல்லூரி காலம் முழுமைக்கும் இன்னொருவரிடம் வேலை செய்யவே தயார்செய்ய படுகிறான் இங்கு தொழில் முனையவோ,சுயமுன்னேற்றம் குறித்தோ மிக சொற்ப்பமாகவே நிகழ்சிகள் நிகழ்தப்படுகிறது அதுவும் கல்லூரியின் செய்திதாள் விளம்பரங்களுக்காக ஒரு நாள் மட்டும் பெயரளவில் நிகழ்தப்படுகிறது இது தொழில் முனைய ஒருவனுக்கு நிச்சயமாக உதவப்போவதில்லை மற்ற நாட்களில் அவனுக்கு கூலிக்காரனாக மாறவே  பயிர்ச்சியளிக்கபடுகிறது.நாட்டின் பொருளதார முன்னேற்றம் நிச்சயமாக முதலாலிகளால் மட்டுமே நிகழ்தமுடியும்.

சுதந்திர இந்தியாவில் கல்வியியல் நிகழ்த்தியிருக்கும் மிகப்பெரிய மாற்றம் இந்திய மக்களை படிக்காத கூலிகளில் இருந்து படித்தக் கூலிகளாக மற்றியதே..இதில் இந்த விளம்பர ஊடகத்தின் பங்கு அளப்பரியது.

நாட்டின்பொருளாதாரத் தளத்தில் இந்த விளம்பர ஊடககத்தின் செயல்பாடுகள் குறித்து பார்ப்போம்.
தங்கம் இந்திய மக்களின் வாழ்வியழில் பொருளாதார ரீதீயில் மிகப்பெரும் முடக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.குறிப்பாக ஆபரண்த்தங்கம் ஒரு முதலீடுக்கான  பொருள் அல்ல(((நகை கடை காரரை தவிர))) அது ஒரு ஆடம்பர பொருள்.இந்த நாகரீகம் பொருளாதார பின்னடைவை தரும் என்ரு மக்களுக்கு உணர்த்தவேண்டியனிலையில் உள்ள ஊடகங்கள் வருவாய்க்காக “எவ்லொ தங்கம் இருக்கோ அவ்லோ சந்தோசம்” என்று விளம்பரப்ரகடணம் செய்ய தயங்குவதில்லை.இந்தியாவில் ரிசர்வ் ஃபாங்க் ஆப் இந்தியாவிடம் உள்ள தங்க இருப்பைவிட மக்களின் கழுத்து காதுகலில் தூங்கிக்கிடக்கும் தங்கம் இரண்டு மடங்கு அதிகம் என ஒரு ஆய்வரிக்கை சொல்கிறது. இவை இந்திய தொழில்துறை நிறுவனங்களிள் முதலீடுகள் ஆக்கப்பட்டிருந்தால் இன்ரு வெளி நாடுகளை சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல்  தள்ளாடிகொண்டிருக்கும் இந்திய தொழில்துறை நிறுவனங்கள் வெளி நாடுகளில் பலமாக கால் ஊன்றியிருக்கும் என்பதில் அய்யம் இல்லை.கல்லூரிகள் ”வேலை வாங்கி தருகிறோம்” என்று சொல்வதும் தவிற்க்கப்பட்டிருக்கும் .மேலும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு தங்க முதலீடுகளால் பெறப்படும் இலாபம் பங்குச்சந்தைகளில் பெறப்படும் இலாபத்தோடு ஒப்பிடுகயில் சொற்ப்பம் என்கின்றனர் வணிகவியல் வல்லுனர்கள்.அத்தோடு இந்தியாவில் தொழில்துறை வளர்ந்து பொருளாதார முன்னேற்றம் பெருகையில் தங்கத்தின் விலை ஐந்து இலக்கதில் இருந்து நான்கு இலக்கமாக மாறினாலும் ஆச்சர்யப்படுவதர்க்கில்லை.இந்த மாற்றம் தங்கமுதலீட்டாளர்களை நிச்சயமாக பாதிக்கும்.

தங்கம் போன்ற இன்னொரு மோசமான முதலீடு நிலங்கள்.இந்த் ரீயல் எஸ்டேட் வணிகம் முழுக்க முழுக்க விளம்பர ஊடகத்தின் வாயிலாகவே மிகப்பெரிய அளவில் நிகழ்த்தப்படுகிறது.இவை நம்மை உள்னாட்டு வணிகப்போட்டிக்கு மட்டுமே இட்டுசெல்லும்,இது பன்னாட்டு வணிகப்போட்டிக்கு ஒரு துளி கூட உதவப்போவதில்லை.மேலும் இது விவசாய துறையில் நிகழ்த்தும் பாதிப்புகள் நீங்கள் அறிந்தவயே.இது குறித்து சமீபத்தில் விஜய் டிவி-யில் நீயா-நானா வில் ரீயல் எஸ்டேட் அதிபர்களுக்கும் ரீயல் எஸ்டேட் எதிர்ப்பாளர்களுக்கு இடையே மிகப்பெரிய விவாதம் நிகழ்த்தப்பட்டது இதில் கோர்ட்சூட் போட்ட தொகுப்பாளர் யாரை ஆதரிக்கிறாரோ அந்த பக்கம் நின்று பேசுவது வழக்கம் (((இந்த கோர்ட்சூட் போட்ட தொகுப்பாளர் உளவியல் ரீதியிலான வாதத்தில் கூட மக்கள் ஆதரவுபெற உளவியல் உண்மைகளை மறுப்பதும் வழக்கம்))). அன்று முழுவதும் அவர் நின்றது ரீயல் எஸ்டேட் எதிர்ப்பாளர்கள் பக்கம் இது இந்த தொலைக்கட்சி நிறுவனதின் மீதான மக்களின் பார்வையை நல்லதாக்கியது ஆனால் அதே நிகழ்ச்சியின் நடுவே போடப்பட்ட விளம்பரம் இப்படிதான் ஆரம்பித்தது “ஆவடில் இருந்து 5கிலோ மீட்டரில் மிக மிக அருகாமையில்”இதனால் அந்த தொலைக்காட்ச்சியின் பசுந்தோல் சற்று விலகித்தான்போனது..

இதுபோலவே இந்தியாவில் TV-பொட்டி வழியாக வந்து தன் சந்தையை வீடுகளுக்குள் விரிக்கும் ஒரு நிறுவனத்தின் விளம்பரகையாளுகை பற்றி பார்ப்போம். இது 52% பங்குகளைத் தனதாகக்கொண்ட ஒரு ப்ரிட்டிஸ் நிறுவனம்.எதிர்க்கும் எந்த நிருவனத்தையும் ஊதித்தள்ளி விடும்.அதற்க்கான காரணம் இது இந்தியர்களின் கருப்பு நிறத்தையும் காசாக்கும் திறமைக் கொண்டது.. விளம்பர ஊடகத்தையும்,அதை பார்த்து ஏமாற தயாரனவர்களை மட்டுமே நம்பி ஆரம்பிக்கப்பட்ட பிரம்மாண்ட நிறுவனம்தான் இந்த.
”” ஹிந்துஸ்தான் யுனிலிவர் ””
அதில் வெற்றியும் கண்டுள்ளது.மொத்தம் 20 ஒப்பனை பொருட்க்களை இங்கு விற்று தள்ளுகிறது.இது விளம்பர ஊடகத்தில் fareness என்ற பெயரில் வெளிர்னிறம் குறித்த மாயையய் பெண்களிடதில் ஏன் சில ஆண்களிடதிலும் கூட உருவாக்கி வெற்றி கண்டுள்ளது..இதில் மனித தோலின் நிறத்திர்க்கான காரணம் தோல் சுரக்கும் மெலனின் எனும் அல்கலைன் பொருள் அதை ஒழிக்க முடியாது என்கிறது அறிவியல்,அப்படியே ஒழித்தாலும் அது மனிதனை சூரியனின் uv கதிர் வீச்சுக்கு உள்ளாக்கி புற்று நோய்க்கு ஆளாக்கும் என்கிறது அறிவியல். இந்த மெலனின் குறைபாட்டால் தான் வெள்ளயர்கள் எப்பொழுதும் xxx படத்தில் வரும் ட்ரகுலாக்கள் போல் “sun protection creem” களை பூசித்திரிகின்றனற்..ஒரு கனத்தில் FAIR & LOVELY(product of hindustan unilever) தனது வேலையை செய்துவிட்டால் இதே நிறுவனத்தின் அடுத்த இறக்குமதி “sun protection creem”-கள்தான்.
     
இதே நிறுவனத்தின் பொருளான AXE-ன் விளம்பரகையாளுகை பெண்னியம் பேசுபவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.
இதுவரை இதுகுறித்து வாய்கிழிய பேசிய நான் இதில் எந்தமற்றத்தையும் நிகழ்த்திவிடமுடியாது என்கிற முடிவோடு இதை முடிகிறேன்.
முடிந்தவர்கள் மாற்றியமையுங்கள்………………………
                                            _செ.வி